மியான்மரில் உள்ள முஸ்லிம்களுக்கான உதவி பிரச்சாரத்தில் துருக்கி 93.6 மில்லியன் துருக்கிய லிராக்களை (TL) சேகரித்துள்ளது.
துருக்கிய பிரதம அமைச்சகத்தின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை இயக்குநரகம் (AFAD) மியான்மரில் உள்ள முஸ்லிம்களுக்கான அவர்களின் உதவி பிரச்சாரத்தில் இதுவரை 93.6 மில்லியன் துருக்கிய லிராக்களை (TL) சேகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புதன்கிழமை AFAD வெளியிட்ட அறிக்கையின்படி, மியான்மரின் அரக்கான் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்காக அவர்கள் திரட்டிய நிதி 93.6 மில்லியன் TL ஐ எட்டியது. (ஒரு அமெரிக்க டாலர் சமம் 1.8 TL)
மியான்மரின் அரக்கான் பகுதியில் உள்நாட்டுப் போர், இனப் படுகொலைகள் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளித்த துருக்கிய குடிமக்கள் மற்றும் அமைப்புகளுக்கு AFAD நன்றி தெரிவித்தது.
(அனடோலியா செய்தி நிறுவனம்)



